மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு;
Update: 2024-02-16 09:26 GMT
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் தலைமையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் , நேதாஜி தினசரி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் பழைய வியாபாரிகளுக்கு ஒதுக்காததை கண்டிப்பதாகவும் , பல சாலைகள் முறையாக போடப்படாதை கண்டித்தும் , மாநகராட்சி பகுதிகளில் பாதாளசாக்கடை இல்லாத இடங்களில், புதிய சாக்கடை கட்ட இது வரை நிதி ஒதுக்கப்படாதை கண்டித்தும் , சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்தனர்.