அதிமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு அதிமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.;

Update: 2024-07-13 12:17 GMT

பிரசுரம் விநியோகம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு அதிமுகவினர் துண்டு பிரசுரம்  விநியோகம் செய்தனர். இதுகுறித்து  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 65 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சனைகளை கண்டுகொள்ளாது ஆட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான வாக்குவாதம் செய்ததோடு உண்ணாவிரத போராட்டமும் செய்தார். 

Advertisement

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் (நோட்டீஸ்) வழங்கி பொதுமக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று ஜூலை 12ம் தேதி மாலை தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நோட்டீஸ் வழங்கி நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினர்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகநயினார், துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளரும் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா.சுதாகர், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.பெருமாள், அம்மா பேரவை விஜயகுமார், ஜெ.ஜெ.தனராஜ், பில்லா விக்னேஷ், மகளிர் அணி நாசரேத் ஜூலியட், கே.ஜெ.பிரபாகர், நடராஜன், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ராஜ்நாராயணன், சௌந்தரபாண்டி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

Tags:    

Similar News