திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.;

Update: 2024-02-02 06:57 GMT

ஆர்ப்பாட்டம் 

தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், பொருளாளர் பங்க் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் நல்லவர்களாக இல்லாததால் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ முடியாத அளவிற்கு வாழ்வாதாரம் கெட்டுவிட்டது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, பாலு, சரவணன், முருகன், சண்முகம், ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News