நாடாளுமன்ற தேர்தலிப் அதிமுக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது-இ.பி.எஸ்!

மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கு மக்கள் வாக்களித்துள்ளதாகவும் பேட்டி.

Update: 2024-06-14 05:41 GMT

இ.பி.எஸ்

கோவையில் இருந்து சென்னை செல்ல விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்கு வங்கி உயர்ந்து இருப்பதாகவும் 2019 ல் நடந்து தேர்தலில் திமுக 33.52 சதவீதம் பெற்றது எனவும் 2024ல் திமுக 26.93 சதவீதம் பெற்று 6.59 சதவீத வாக்கு குறைவாக பெற்றுள்ளதாக கூறியவர் திமுகவிற்கு வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதிமுகவின் வாக்கு சரிந்து விட்டதாக கூறப்படுவது தவறு என்று கூறியவர் 1 சதவீத வாக்கு கூடுதலாக அதிமுக பெற்று இருப்பதாக தெரிவித்தார்.திமுகவில் ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள்,ராகுல் காந்தி,திருமாவளவன் என கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் பாஜகவில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக பிரேமலதா சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும் முக்கிய தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆங்காங்கே பொறுப்பில் இருந்ததால் தமிழகம் முழுவதும் செல்லவில்லை என்றவர் இருப்பினும் வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து இருப்பதாக தெரிவித்த அவர்.தேசிய கட்சியுடன் திமுக கூட்டணி வைத்ததால் இந்த தேர்தலில் அதிக வாக்கு கிடைத்ததுள்ளது எனவும் அதிமுகவை போல் தனித்து போட்டியிட்டு இருந்தால் இந்த வாக்குகள் கிடைத்து இருக்காது எனவும் தெரிவித்தார்.மேற்கு மண்டலம் திமுக கோட்டை என கற்பனையாக நினைத்து கொண்டு இருக்கின்றனர் என்ற அவர் சட்டமன்றத்தற்கு ஒரு மாதிரியும் நாடாளுமன்றத்திற்கு வேறு மாதிரியும் மக்கள் வாக்களிப்பாளர்கள் எனவும் இந்திய கூட்டணிக்கும்-பா.ஜ.க கூட்டணிக்கும் போட்டி இருந்ததாகவும் அதிமுக தமிழக உரிமைகளை காக்க நடுநிலையோடு இருந்ததாகவும் கூறினார்.பிரிந்து சென்றவர்களுக்கு பின்பே கூடுதலாக அதிமுக வாக்கு வாங்கி இருப்பதாகவும் கட்சி பலமாக இருக்கின்றது எனவும் கூறியவர் விக்கிரவண்டி தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Tags:    

Similar News