சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்: அதிகாரி சஸ்பெண்டு!!
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்த குடியுரிமை அதிகாரி சரவணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.;
Chennai airport
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய அதிகாரி சரவணன் வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதியானது. இதையடுத்து குடியுரிமை அதிகாரி சரவணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் கடத்தல் காரர்களிடம் இருந்து தங்கத்தை, சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.