ஆலங்குளத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - மனோஜ் பாண்டியன்
ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.;
Update: 2024-06-28 08:12 GMT
மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்டசபையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆலங்குளம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் பகுதியில் பேவர் பிளாக் தரைதளம் அமைத்து சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், ஆடி அமாவாசை திருவிழாவில் சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை வனத்துறையினர் தங்கு தடை இன்றி அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.