நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அலவந்தான்குளம் கிராம மக்கள் மனு
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அலவந்தான்குளம் கிராம மக்கள் மனு அளித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 13:01 GMT
மனு அளித்த மக்கள்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அலவந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அதில் அலவந்தான்குளம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் மூன்று ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் முறையான குடிநீர் விநியோகம் இல்லாமல் சிரமம் ஏற்பட்டு வருகிறது.குடிநீர் திட்டத்தை உயர்நீதிமன்ற உத்தரவு, அரசின் செயல்முறை ஆணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் விரைவில் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்த தவறினால் அலவந்தான்குளம் கிராம மக்கள் தங்கள் கிணற்றில் இருந்து மற்ற கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை அடைத்து போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.