ஆல் இந்தியா ஏ கிரேட் கபடி போட்டி

வாணியம்பாடியில் நடைபெறும் ஆல் இந்தியா A - கிரேட் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 40க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றுள்ளன.

Update: 2024-03-01 07:59 GMT

கபடி போட்டி 

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள சூர்யா ஜென் பள்ளி வளாகத்தில் ஆல் இந்தியா A - கிரேட் ( ஆண்கள் & பெண்கள்) கபடி போட்டி இன்று தொடங்கியது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, பஞ்சாப், போன்ற பல மாநிலங்களிலிருந்து 40க்கும் மேற்பட்ட கபடி அணிகள், பங்கேற்றன.இந்த கபடி விழாவை வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர் சாரதி குமார், ஆகியோர் துவக்கி வைத்தனர்..

இந்த ஆல் இந்தியா A - கிரேட் கபடி போட்டியின் முதல் போட்டியாக பெண்கள் பிரிவில், கேரளா மற்றும் மதுரை பெண்கள் அணிக்கான போட்டி நடைப்பெற்றது, இதில் மதுரை பெண்கள் கபடி அணி வெற்றி பெற்றது.. அதேபோல் ஆண்கள் பிரிவில் நடைப்பெற்ற முதல் போட்டியில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அணியும், தர்மபுரி பகுதியை சேர்ந்த அணியும் மோதியதில், வாணியம்பாடி அணி வெற்றி பெற்றது.

இதனை போன்று, இன்று முதல் , வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய நான்கு தினங்களில் கபடி போட்டி நடைப்பெற உள்ள நிலையில், போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணியிற்க்கு 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பெண்கள் அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.. மேலும் இந்த கபடி போட்டியை காண மைதானம் போல் மேடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், என பலர் கபடி போட்டியை கண்டு ரசித்தனர்.மேலும் கபடி போட்டியிற்கு முன்னதாக பள்ளி மாணவர்களின் அசத்தலான நடனம், மற்றும் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது...

Tags:    

Similar News