தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய கருத்தரங்கு !
தமிழ்நாடு ஸ்டேட் சென்டர் மற்றும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து ‘வேஸ்ட் டு எனர்ஜி டெக்னாலஜி’ என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கு கல்லூரியில் நடத்தியது.
தமிழ்நாடு ஸ்டேட் சென்டர் மற்றும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து ‘வேஸ்ட் டு எனர்ஜி டெக்னாலஜி’ என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கு கல்லூரியில் நடத்தியது. இதில் எம்.எஸ்.எம்.இ. தேசிய கவுன்சில் உறுப்பினர் மாரியப்பன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஜெகதீஸ்வரன், தமிழ்நாடு மாநில மைய கவுரவ செயலாளர் கோகுல் ஆகியோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இக்கருத்தரங்கில் இந்தியாவில் சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கு கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம், உலகளாவிய நிலையில் திடக்கழிவு மேலாண்மையின் சிக்கல்களை மதிப்பீடு செய்தல், பயனுள்ள கழிவு மேலாண்மை கொள்கைகளின் தேவை, கழிவு மேலாண்மையின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விளைவுகள், கழிவு மேலாண்மையின் மறுசுழற்சியின் முக்கியத்துவம் ஆகிய 5 தலைப்புகளில் 115-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமர்ப்பித்தனர். இந்த கருத்தரங்கில் 750-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், என்ஜினீயர் மாரியப்பனின் 50 ஆண்டு சிறப்பாக சேவையை பாராட்டும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.