அனைத்து துறை அரசு அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் வாழைகிரி அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் மல்லிகா நகரில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;
Update: 2024-03-01 05:01 GMT
அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட வாழைகிரி அருகே மல்லிகா நகரில் அடிப்படை வசதிகள் இன்றி பழங்குடியின மக்கள் வசித்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அனைத்து துறை அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
சாலை மற்றும் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர உத்தரவு,பழங்குடியின மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்,
இதில் கோட்டாட்சியர்,வட்டாட்சியர், வனத்துறை,வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்