மதுரை: அனைத்துக் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
தமிழகம் வந்த பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அனைத்துக் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தமிழகம் வந்த பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அனைத்துக் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் தமிழகத்திற்கு மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்துள்ளார், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை எதிர்ப்பு தெரிவித்தும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மதுரையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.
வட மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது தமிழர்களை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இழிவாக பேசியதாகவும், தமிழகம் வரும்போது வாக்குக்காக தமிழர்களை புகழ்ந்து பேசுவதாக கூறி போராட்டம் நடைபெற்றது, மதுரை கட்டபொம்மன் சிலை அருகே இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்கள் கட்சியின் முதன்மை செயலாளர் எ.சி.பாவரசு. மாவட்டச் செயலார்கள் ரவிக்குமார். அரச முத்துப்பாண்டியன். சிந்தனை வளவன். மேலூர் சசி உள்ளிட்ட விசிகவினர்மோடி அமைச்சாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, இப்போராட்டத்தையோட்டி காவல்துறை இணை ஆணையர்கள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.