கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிலை மறைக்கப்படவில்லை குற்றசாட்டு....

கருணாநிதி சிலையை மறைக்காமல், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி உள்ளதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-04-04 09:24 GMT

கருணாநிதி சிலை

செங்கல்பட்டு மாவட்டம்,கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மறைக்காமல், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி உள்ளதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பயணியர் கூறியதாவது: நாடு முழுதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் தொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி, சில இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

அதை கண்காணிக்க, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படையினர், ஒவ்வொரு பகுதியாக சுற்றி வருகின்றனர். இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மறைக்கப்படவில்லை.

மேலும், பேருந்து நிலையத்தின் உட்புறம் உள்ள கருணாநிதியின் சிலையும் மறைக்கப்படவில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால், கருணாநிதி சிலையை மறைக்க நடவடிக்கை எடுப்பதில், தேர்தல் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News