வாக்கு எண்ணிக்கைக்கு குலுக்கல் முறையில் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை குலுக்கல் நடைபெற்றது.

Update: 2024-06-03 09:59 GMT

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை குலுக்கல் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை குலுக்கல் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றப்பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் - 4ம் தேதி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 306 நபர்கள் பணிபுரிய உள்ளார்கள். இவர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா, தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணும் பணியில் உள்ளவர்களுக்கு வாக்குகள் எண்ணும் முறை குறித்து முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News