குமரி கோவில் விழாக்களில் யானை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

குமரி கோவில் விழாக்களில் யானை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-03-03 04:14 GMT
அமைச்சரிடம் மனு அளித்த குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்
கன்னியாகுமரி மாவட்ட தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் 490  திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பாரம்பரிய முறைப்படி விழாக்கள் நடத்த 1956-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த போது ஐந்து யானைகள் வாங்கப்பட்டது. இந்த யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக நோயால் இறந்தன. கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குழித்துறை கோபாலன் யானையும் இறந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் யானைகள் வடகைக்கு வெளி மாவட்ட த்தில் இருந்து கட்டுபாட்டுடன் பயன்படுத்தி வந்தனர். முறையான லைசன்ஸ், தடுப்பூசி போடாமல் யானைகள் பயன்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், வனத்துறை கடும் கட்டுபாடு விதித்தது. இதனால் திருவிழா காலங்களில் யானைகள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து யானை கொண்டு வருவது பெரும் பொருட் செலவாகும். இதனை கருத்தில் கொண்டு குமரி மாட்டத்திற்கு தனியாக ஓர் யானை வேண்டும் என்று குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம்  நேரில் சந்தித்து யானை வேண்டி கோரிக்கை மனு கொடுத்தார். அவர் கூறுகையில், வருகிற இன்று  3 ம் தேதி மண்டைக்காடு மாசி திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. விழா விற்கு, யானைகள் பயன்படுத்து வது வழக்கம். வனத்துறை கட்டுப்பாட்டி ன் காரணமான யானைகள் கொண்டு வருவதில் எழும் சிக்கல்களை களைய மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார் " என்றார்.
Tags:    

Similar News