செய்யாறு ரிவர் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம்
லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கினர்.;
Update: 2024-01-13 09:45 GMT
ஆதரவற்றோர்க்கு மதிய உணவு
மதிய உணவு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ரிவர் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு செய்யாறு பகுதியில் உள்ள மாவா தொண்டு அமைப்பு சார்பில் இயங்கி வரும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினர். இந்நிகழ்வில் செய்யாறு ரிவர் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் கோபிநாத், பொருளாளர் துரைசாமி. துணை செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் தலைவர்கள் மதியழகன், ரவி லயன் .கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.