எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
ஆத்தூர் திமுக ஒன்றிய கவுன்சிலர், பாமக ஒன்றிய இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.;
Update: 2024-03-24 02:30 GMT
அதிமுகவில் இணைந்தவர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் ஆத்தூர் திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பாமக ஒன்றிய இளைஞரணி செயலாளர், அமமுக பாசறை செயலாளர் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர் . மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர். இளங்கோவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.