முன்னாள் மாணவர்கள் கோப்பை - 2024 விளையாட்டு விழா

நாகை திருக்குவளை பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில்  முதலாவது முன்னாள் மாணவர்கள் கோப்பை - 2024 விளையாட்டு விழா நடந்தது.;

Update: 2024-04-10 11:38 GMT

நாகை திருக்குவளை பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில்  முதலாவது முன்னாள் மாணவர்கள் கோப்பை - 2024 விளையாட்டு விழா நடந்தது. 

நாகை திருக்குவளை பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில்  விளையாட்டுத் துறையின் சார்பில்  முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் முதலாவது முன்னால் மாணவர்கள் கோப்பை - 2024 நடைபெற்றது. 

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கைபந்து (வாலிபால் ) போட்டி மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி 3நாட்கள் நடைபெற்றது. இதில் . விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய கல்லூரிகளின் அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். கைபந்து (வாலிபால் ) போட்டியில்   திருக்குவளை பொறியியல்லூரி  முதலிடத்தையும், பண்ருட்டி  பொறியியல் கல்லூரி  இரண்டாவது இடத்தையும், விழுப்புரம் பொறியியல் கல்லூரி  மூன்றாவது இடத்தையும், பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரி  நான்காவது இடத்தையும் பெற்றது. மேலும் கிரிக்கெட் போட்டிகளில் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், திருக்கு வளை  பொறியியல் கல்லூரி  இரண்டாவது இடத்தையும், நாகை மாவட்டம்சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி மூன்றாவது இடத்தையும், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றனர். 3 நாட்கள் நடைப்பெற்ற  போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்  தாங்கினார்.

Advertisement

  தமிழ் துறை, உதவிப் பேராசிரியர்  மனோகர் வரவேற்றார், திருக்குவளை பொறியியல்  கல்லூரியின்  முதல்வர்  இளங்கோவன்  கலந்து கொண்டு பேரட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். முதலாவது முன்னாள்  மாணவர்கள் சார்பில் திருக்குவளை கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் 100 மரக்கன்றுகளைப் புல முதல்வர் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது.. நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர்கள்  வினோத் , விஜயராஜன் உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் . உள்ளிட்டோர் கலந்து கொண்டானர்.

Tags:    

Similar News