அரசுப்பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள சீலிங்ஃபேன்களை வழங்கினர்.;
Update: 2024-03-16 04:04 GMT
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள சீலிங்ஃபேன்களை வழங்கினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 84 ஆம் ஆண்டு முதல் 86 ஆம் ஆண்டு வரை 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள சீலிங் ஃபேன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். முன்னாள் மாணவர்கள் ராஜமாணிக்கம், முரளி, ஜெயபிரகாஷ், சுந்தரமூர்த்தி,அருள், சேகர் சண்முகம் திமுக நகரச் செயலாளர் வேல்முருகன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டனர்