முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-30 07:40 GMT

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) வணிக நிர்வாகவியல் துறை சார்பாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வானது கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 2000-2003 ஆம் ஆண்டில் வணிக நிர்வாகவியல் துறையில் பயின்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தாளாளர் திரு.கே.பி இராமசுவாமி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அவர்தம் உரையில் இந்த கல்லூரி உங்கள் கல்லூரி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த கல்லூரிக்கு வந்து செல்லலாம் முன்னாள் மாணவர்கள் என்ற பந்தத்தில் எப்போதும் பிணைப்புடன் இருக்க வேண்டும் உங்களால் கல்லூரிக்கு நன்மை கல்லூரியால் உங்களுக்கும் நன்மை என்றார். முன்னாள் மாணவர்கள் பேசுகையில் கல்லூரியை 20 ஆண்டுகள் கழித்து பார்வையிடும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உட்கட்டமைப்புகளில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் நல்ல விதமான பெயரும் புகழும் கல்லூரிக்கு ஏற்பட்டுள்ளது.பழைய நினைவுகள் மீண்டும் துளிர்க்கின்றன இவ்வாறு முன்னாள் மாணவர்கள் பேசினர். இறுதியில் அனைவரும் நினைவு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் இயக்குனர்-கல்வி முனைவர் இரா. செல்வகுமரன், கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஆ. ஸ்டெல்லா பேபி, சமூக செயல்பாட்டு தலைவர் முனைவர் எம். இராமமூர்த்தி, உள்தர கட்டுப்பாட்டுக்குழு தலைவர் முனைவர் எச். லுக்மேன்சித்திக், வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் திரு. சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த உதவிப் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News