செங்கல்பட்டு அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

செங்கல்பட்டு அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-12-31 16:14 GMT
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

34 ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு மேலவளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மேலவளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் , முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா சிறப்பாக நடந்தது.

சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 1989 - 1990 ல் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர் சேர்ந்து அவர்கள் படித்த போது, ஆசிரியர்களாக பணியில் இருந்தவர்களிடம், தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

ஒவ்வொரு மாணவர்கள் 34 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு, அனைவரும் ஒன்று கூடி ஆங்காங்கே பள்ளி வளாகத்தில் அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிவில் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களே மலர் தூவி ஆசீர்வாதம் வழங்கினர்.

Tags:    

Similar News