மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை

மயிலாடுதுறை பட்டவர்த்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2023-12-07 01:43 GMT

அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த ,2021-ஆம் ஆண்டு ,அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள பட்டவர்த்தி பேருந்து நிறுத்தத்தில், முதன்முறையாக அம்பேத்கர் படத்திற்கு, மரியாதை செய்ய ,விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பிரிவினர், முயற்சி மேற்கொண்டனர். காவல்துறை அனுமதியை மீறி அம்பேத்கர் உருவ படத்தை வைத்து மரியாதை செய்ய முயன்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்த்தனர். திடீரென கல்வீச்சும் , போலீசார் தடியடியும் நடைபெற்றது.

சென்ற ஆண்டு அப்பகுதியில், 144 தடை உத்தரவு போடப்பட்டு அரசு விழாவாக நடைபெற்றது. அதில், விடுதலை சிறுத்தை கட்சியினர் பங்கேற்றனர். அதேபோன்று இன்றும் பட்டவர்த்தி கிராம கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக அம்பேத்கர் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா , தலைமையில் அரசு அதிகாரிகள், காவல் துறையினர், மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதில் 20 விடுதலை சிறுத்தை கட்சியினர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில், 250 க்கும் மேற்பட்ட போலீசார் பட்டவர்த்தியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News