ஊர்வலத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் பதட்டம் அடைந்த காவலர்கள்

ஊர்வலத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் பதட்டம் அடைந்த காவலர்கள் பாதுகாப்பாக ஆம்புலன்ஸை வழி அனுப்பி வைத்தனர். இதனால் அப்போது பரபரப்பு காணப்பட்டது.

Update: 2024-03-26 12:30 GMT

ஆம்புலன்ஸ்

ஊர்வலத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் பதட்டம் அடைந்த காவலர்கள் இன்று முக்கிய நாளாக கருதப்படுவதால் நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பிஜேபி மற்றும் அதிமுக கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். தாக்கல் செய்வதற்காக பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு சுங்க கேட் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது தாந்தோணிமலை கடைவீதி அருகே செல்லும்போது, எதிர் திசையில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. ஊர்வலம் சென்ற கூட்டத்தினர் அதிகமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் வண்டியால் எதிர்த்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் கண்ட காவலர்கள் மற்றும் பேரணியில் கலந்து கொண்ட கட்சியினர் உடனடியாக சாலையை ஒழுங்குப்படுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழி விடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும், பாதுகாப்பாக ஆம்புலன்ஸை வழி அனுப்பி வைத்தனர். இதனால் அப்போது பரபரப்பு காணப்பட்டது.
Tags:    

Similar News