ஆம்புலன்சுகளிலும் பறக்கும் படையினர் சோதனை

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆம்புலன்சுகளிலும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

Update: 2024-03-20 15:37 GMT

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆம்புலன்சுகளிலும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.


தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வரு கிறது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங் களில் எடுத்துச்செல்வார்கள்.

இதனை கண்காணித்து தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை குழுக்களும், நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு அக்குழுவினர் மாவட்டத்தின் பல் வேறு இடங்களிலும் மற்றும் முக்கிய சாலைகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு வழங்குவ தற்காக பணம் மற்றும் பரிசுப்பொருட்களை யாருக்கும் சந்தேகம் ஏற்படாத அளவிற்கு ஆம்புலன்சுகளில்கூட கொண்டு செல்லக்கூ டும், எனவே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தானே என்று சோதனை செய்யாமல் இருக்கக்கூடாது என்றும், அந்த வாகனங்களையும் சோதனை செய்யும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர், நிலை யான கண்காணிப்புக்குழுவினர் மாவட்டத்தின் முக்கிய சாலை களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு அவ்வழியாக வந்த தனியார் ஆம்புலன்சுகளையும் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்த பின்னரே செல்ல அனுமதித்தனர்.

Tags:    

Similar News