ஆம்பூர் : இருசக்கர வாகனங்கள் திருடி விற்பனை - இளைஞர் கைது

ஆம்பூர் நகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி அதை கிராம பகுதிகளில் மலிவான விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது, அவரிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.;

Update: 2023-12-01 05:59 GMT

கைது செய்யப்பட்ட இம்தியாஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு  புகார்கள் வந்த நிலையில், ஆம்பூர் நகர் பகுதிகளில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்கும் நபரை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து ஆம்பூர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்,

Advertisement

அப்போது ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே தனிப்படை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருத்த போது அவ்வழியாக வந்த இளைஞரை பிடித்து அவரிடம் விசாரணை மேற்க்கொண்டனர். அவர் ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த இம்தியாஸ் (26) என்பதும் அவர் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்து அதை கிராம பகுதிகளில் ரூ.3000 ஆயிரம் முதல் 5000 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து இம்தியாஸை கைது செய்த காவல்துறையினர்  அவர் மீது  வழக்குபதிவு செய்து அவரிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடந்து இளைஞரை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News