காங்கேயம் அருகே மூச்சு திணறி 8 மாத ஆண் குழந்தை பலி !
காங்கேயம் ஊதியூர் அருகே தட்டார வளர்ச்சி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 8 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு.
By : King 24x7 Angel
Update: 2024-07-09 04:56 GMT
காங்கேயம் தாலுக்கா ஊதியூர் அருகே குறுக்கபாளையம் தட்டார்வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). இவருடைய மனைவி கவிஸ்ரீ (23). இவர்களுக்கு குறை பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்து 8 மாதம் ஆகிறது. அந்த குழந்தைக்கு நேற்று காலை 6 மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பால்குடிக்கும்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊதியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.