கைலாசநாதர் கோவில் வாயிலில் திறந்து கிடக்கும் மின்பெட்டி

கைலாசநாதர் கோவில் வாசலில் மின்பெட்டி திறந்து கிடக்கிறது.

Update: 2024-01-16 08:41 GMT

திறந்து கிடக்கும் மின்பெட்டி

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 - 728ம் ஆண்டில், 'சான்ட் ஸ்டோன்' எனப்படும், மணற்கற்களால் கட்டப்பட்டது.

இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர், பக்தர்கள் மட்டுமின்றி அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் வந்து செல்கின்றனர். இக்கோவில் சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள பகுதியில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில் மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், கோவில் நுழைவாயில் கேட் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்விளக்கு கம்பத்தின் அடிப்பாகத்தில் சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் உயரத்தில் உள்ள மின்பெட்டியில் ஒயர்கள் வெளியே தெரியும் நிலையில், ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது.

கோவிலுக்கு வரும் சிறுவர்கள், குழந்தைகள் விளையாட்டுத்தனமாக மின்பெட்டியை தொட்டாலோ, ஒயர்களை பிடித்து இழுத்தாலோ மின்விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் மின்பெட்டியை பாதுகாப்பாக மூடி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்."

Tags:    

Similar News