பறவைகளின் தாகம் தீர்க்க மண் கலயம் வைக்கும் நிகழ்வு

பறவைகளின் தாகம் தீர்க்க மண் கலயம் வைக்கும் நிகழ்வு யானைமலை கிரீன் பவுண்டேசன் சார்பாக நடைபெற்றது.

Update: 2024-03-10 15:21 GMT
யானைமலை கிரீன் பவுண்டேஷன் 153வது வார நிகழ்வாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் பறவைகளின் தாகத்திற்கு குடிதண்ணீர் மண் கலயம் வைக்கும் நிகழ்வு காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. சமூக ஆர்வலர் செல்வி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கே எஸ் சேகர் வளர்மதி அறக்கட்டளை நிறுவனர் ராணி கலந்து கொண்டு, சமூக சேவைகளை பற்றியும் மரம் நடுதல் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். ராணி அவர்களுக்கு யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக சமூக சீர்திருத்தவாதி விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் காந்தி அருங்காட்சியக கல்லூரி முதல்வர் தேவதாஸ் காந்தி வாழ்த்துரை வழங்கினார். காந்தி அஸ்தி மண்டபத்தில் மரக்கன்று நடப்பட்டது. மேலும் காந்தி அருங்காட்சியத்தில் உள்ள மரங்களில் பறவைகள் குடிதண்ணீர் அருந்த வசதியாக மண் கலயம் வைக்கப்பட்டு குடிதண்ணீர் ஊற்றப்பட்டது. மயில்கள், பறவைகள் உண்ண அரிசி மற்றும் பிற தானியங்கள் வைக்கப்பட்டன. நிகழ்வில் சமூக ஆர்வலர் அசோக்குமார், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், நீர்நிலைகள் அமைப்பின் நிறுவனர் அபூபக்கர், மாற்றம் தேடி நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், நல்லோர் குழு ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், சமூக ஆர்வலர்கள் முகிலன், சிலம்பம் மாஸ்டர் பாண்டி யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை ஆசிரியர் தென்னவன், பிரபு, கார்த்திகேயன், ராகேஷ், பரமேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் தாஹா, ரமேஷ், சிவா, காந்தி அருங்காட்சியாக பணியாளர் நாகசுந்தரம், மாணவ, மாணவிகள் ஒத்தக்கடையை சேர்ந்த பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News