விபத்து நடந்ததாக கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்களை அலைக்கழித்த போதை வாலிபர்

கடையால் பகுதியில் விபத்து நடந்ததாக கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அழைத்து அலைக்கழித்த போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-05-26 13:44 GMT

கடையால் பகுதியில் விபத்து நடந்ததாக கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அழைத்து அலைக்கழித்த போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.


பேச்சிப்பாறை அருகே வலியாஏலா பகுதியை சேர்ந்தவர் அஷாந்த். மதியம் கடையால் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கினார். பின்னர் ரோட்டோரத் தில் நின்று மது குடித்துள்ளார். போதை தலைக் கேறிய வேகத்தில் தனது செல்போனில் இருந்து 108 சேவையை தொடர்பு கொண்டு பேசினார். அப்- போது விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.உடனே பேச்சிப்பா றையில் இருந்து ஆம்புலன்ஸ் கடையால் பகுதிக்கு புறப்பட்டது.கடையால் அருகே வரும்போது ஆம்புலன்ஸ் பணியாளரை தொடர்பு கொண்டு ஜங்ஷன் பகுதிக்கு வரும் படி கூறி உள்ளார்.

Advertisement

ஜங்ஷனுக்கு வந்தபோது விபத்து நடந்ததற்கான அறிகுறிகள் தென்படாததால் மீண்டும் அழைப்பு வந்த போனில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அப் போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரிடம் விபத்து எங்கு நடந்தது யாருக்கு உதவி வேண்டும் என்றதோடு 108 சேவையை ஏன் அழைத்தீர்கள் என்று பணியாளர்கள் கேட்டுள்ளனர்.ஆனால் போதை வாலிபர் எந்த பதிலும் கூற வில்லை. இதற்கிடையே தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போதை ஆசாமியால் அலைக்கழிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News