திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ஓடும் ரயிலில் தவறி விழுந்த முதியவர் பலி
திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ஓடும் ரயிலில் தவறி விழுந்த முதியவர் பலி;
Update: 2024-07-15 11:52 GMT
பலி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ஓடும் ரயிலில் தவறி விழுந்த முதியவர் பலி கேரளாவில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், 65 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர், பாலக்காட்டில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரயில் டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணம் செய்தார். ரயில் திருப்பத்துார்-காக்கங்கரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே வந்தபோது, அந்த முதியவர் ரயில் படிக்கட்டின் அருகே நின்று பயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில், அதே ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த முதியவரின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை செய்து வருகின்றனர்.