வட மாநில முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஊர் திரும்ப கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்த வட மாநில முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் சுந்தராகாக் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மன் நாயக் வயது 61. இதே போல மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், விவேகானந்தன் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி வயது 54. இருவரும் தொழில் ரீதியான நண்பர்கள். ஜெயமணி விநாயகா போர்வெல் என்ற நிறுவனத்தை ஒடிசா மாநிலத்தில் நடத்தி வருகிறார். அதேபோல லட்சுமி நாயக் ஜங்கல்யான் பவுண்டேஷன் என்ற பெயரில் ஒடிசாவில் போர்வெல் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், தனது போர்வெல் நிறுவனத்திற்கு தமிழகத்தில் இருந்து தொழிலாளிகளை அழைத்துச் செல்வதற்காக தமிழகத்துக்கு வந்த இவர், பல்வேறு பகுதிகளில் அதற்கான வேலைகளை முடித்துவிட்டு, இறுதியாக சொந்த ஊர் திரும்ப ஜனவரி 8ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில், கரூர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, திடீரென லக்ஷ்மன் நாயக் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ஜெயமணி, இது குறித்து கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த லட்சுமி நாயக் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.