சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

காமக்காப்பட்டியில் சைக்கிளில் சென்ற முதியவர், கார் மீது மோதி விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார்.;

Update: 2024-06-16 13:37 GMT

காமக்காப்பட்டியில் சைக்கிளில் சென்ற முதியவர், கார் மீது மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பெத்தாச்சி நகர் அருகே உள்ள கஞ்சமரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொம்மு நாயக்கர் வயது 70. இவர் ஜூன் 14ஆம் தேதி மதியம் 12:15 மணியளவில், திண்டுக்கல்- கரூர் சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காமக்காப்பட்டி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த பெங்களூர் சி வி ராமன் நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி வயது 46 என்பவர் ஓட்டி வந்த கார் மீது,பொம்ம நாயக்கர் ஓட்டிச் சென்ற சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பொம்ம நாயக்கரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் ஆந்தோனி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டி சென்று, விபத்து ஏற்படுத்திய பொம்ம நாயக்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News