டூவீலரில் சென்ற முதியவர் சாலையோர கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கரூர் மாவட்டம் சாந்தபாடி டூவீலரில் சென்ற முதியவர் சாலையோர கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்

Update: 2023-12-31 02:03 GMT

டூவீலரில் சென்ற முதியவர் சாலையோர கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்ன தாராபுரம், காட்டாம்புதூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் வயது 60. இவர் டிசம்பர் 29ஆம் தேதி காலை 9 மணி அளவில் அவருக்கு சொந்தமான டூவீலரில் சொந்த வேலையாக சாந்தப்பாடி சென்று கொண்டிருந்தார். சாந்தபாடி அருகே சென்ற போது நிலை தடுமாறி அப்பகுதியில் சக்திவேல் என்பவரது நிலத்தில் சாலை ஓரத்தில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக டூவீலருடன் விழுந்துவிட்டார். இந்த சம்பவத்தில் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி முனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த முனியப்பனின் மகன் தட்சிணாமூர்த்தி வயது 39 என்பவர், இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த முனியப்பன் உடலை மீட்டனர். மேலும் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News