கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது
தர்மபுரி மாவட்டம், மலைக்காரன்கொட்டாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-27 02:51 GMT
கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட மலைக்காரன்கொட்டாய் கிராமத்தில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதியமான்கோட்டை காவலர்கள் அந்த பகுதிக்கு நேற்று சென்று கண்காணித்தனர். அப்போது சின்னசாமி என்ற முதியவர் வீட்டின் பின்புறம் கஞ்சா பதுக்கி விற்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், முதியவரை கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.