வெங்கமெடு அருகே ஒரு ஹான்ஸ் பாக்கெட் வைத்திருந்த முதியவர் கைது

வெங்கமெடு அருகே ஒரு ஹான்ஸ் பாக்கெட் வைத்திருந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-05 11:14 GMT

கோப்பு படம் 

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வெங்கமேடு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார் ஏப்ரல் 3-ம் தேதி மதியம் 3 மணி அளவில், நாவல் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது நாவல் நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி வயது 68 என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்து, அந்த கடையில் சோதனை நடத்தினார். சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த ஒரே ஒரு பாக்கெட், ரூபாய் 30 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக முத்துசாமியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News