முசிறியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது பைக் மோதி பலி

திருச்சி மாவட்டம் முசிறியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பைக் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.;

Update: 2024-06-10 09:38 GMT
முசிறியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது பைக் மோதி பலி

கோப்பு படம் 

  • whatsapp icon

திருச்சி மாவட்டம் முசிறி அழகப்பபட்டி ரோடு சக்தி நகரை சேர்ந்தவர் 75 வயதான முருகேசன்.இவர் முசிறியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றார். அப்போது தொட்டியம் தாலுகா அப்பநல்லூர் மடுலாம்புதூரைச் சேர்ந்த 22 வயதான அபிமன்யு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது .இதில் தடுமாறி கீழே விழுந்த முதியவர் படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் எனக் கூறினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News