வனவிலங்குகளை வேட்டையாட வந்த முதியவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது :
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த முதியவர் கைது - இருவருக்கு அபராதம்
By : King 24x7 Website
Update: 2023-12-27 16:03 GMT
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த முதியவர் கைது : இரும்பு கம்பி வலையுடன் சுற்றித்திரிந்த இருவருக்கு அபராதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குந்துகோட்டை அடுத்துள்ள கோனமாக்கனப்பள்ளி பீட் கொம்பாட்டி பாறை வனப்பகுதியில் அஞ்செட்டி வனச்சரக அலுவலர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முதியவர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அவரை மடக்கி பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர், அஞ்செட்டி அருகே உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (60) என்பது தெரியவந்தது இதனையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்தனர். இதேபோல் மேட்டுமடுவு வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட இரும்பு கம்பி வலையுடன் சுற்றித்திரிந்த அஞ்செட்டி அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ராமன் (52) அஞ்செட்டி ராமர் கோவில் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (63) ஆகிய 2 பேரை மடக்கிப் பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.