மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் கைது
ஆற்காடு பகுதியில் மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-13 02:42 GMT
மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே புதேரி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதே பகுதியில் உள்ள அனந்தாங்கல் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் ராஜேந்திரனை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.