மீன்பிடிக்கச் சென்ற முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2024-01-22 05:38 GMT

மீன்பிடிக்கச் சென்ற முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடி அன்னை தெரசா காலனியைச் சோ்ந்த வின்சென்ட்ராஜ் மகன் சுரேஷ்(60). மீனவரான இவா் கடந்த 19ஆம்தேதி தனது நண்பா்கள் இருவருடன் சிறிய படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாராம். இவா்கள் கரையில் இருந்து சுமாா் 4 கடல் மைல் தொலைவில் கடலுக்குள் சென்றபோது, ஏற்கெனவே உடல்நலக் குறைவுடன் இருந்த சுரேஷ் திடீரென படகில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.  அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News