அடையாளம் தெரியாத நபர் பலி - காவல்துறையினர் விசாரணை
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயர் விலாசம் தெரியாதவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-30 05:31 GMT
அடையாளம் தெரியாத நபர் விபத்தில் பலி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் அடிபட்டு கிடந்துள்ளார், இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்துபோனவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? விபத்து ஏற்ப்பட்டது எப்படி என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். .