ஆம்பூர் அருகே இரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே இரயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-07-04 05:51 GMT
உயிரிழந்த வாலிபர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் கன்னிகாபுரம் பகுதியில் இரயிலில் அடிபட்டு சுமார் 43 வயதுடைய வாலிபர் உயிரிழந்தார். இறந்தவர் யார் இவர் ரயிலில் பயணம் செய்யும் பொழுது விழுந்து உள்ளாரா இல்லை, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்துள்ளாரா? என்று பல்வேறு கோணங்களில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரேத உடலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.