பராமரிக்கப்படாத பூங்கா மழை நீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறிய அவலம்
பொன்னேரி நகராட்சி சக்தி நகரில் புதிதாக அமைக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்படாத பூங்கா மழை நீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,92 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு வசதிகளுடன்கூடிய பூங்கா அமைக்கப்பட்டது பூங்கா வளாகங்களை சுற்றிலும் சுற்றுச்சுவர், நடைபயிற்சி செய்பவர்களுக்கு நடைபாதை, ஒய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டும் சிறுவர்கள் விளையாடுவதற்கு தேவையான சறுக்கு மரம், ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவைகளும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு வசதிக்காக 'சிசிடிவி' கேமராக்கள், நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் பூங்காவை பராமரிக்காமல் பூங்காவில் மழை நீர் முழுவதுமாக தேங்கி ஒரு பகுதி நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டும் உள்ளது உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் தொடர்ந்து சிறுவர்கள் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாமல் பூங்காவை பூட்டி வைத்துள்ளனர் நகராட்சி ஆணையர் கோபிநாத் மற்றும் நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் ஆகியோர் உரிய ஆய்வு மேற்கொண்டு நீச்சல் குளம் போல் மாறிய பூங்காவை சீரமைத்து பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.