நோயாளிகள் பராமரிப்பு குறித்த பகுப்பாய்வு கூட்டம்!
திருவண்ணாமலையில் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பராமரிப்பு குறித்த பகுப்பாய்வு கூட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-05-29 07:25 GMT
திருவண்ணாமலையில் சினம் தொண்டு நிறுவனம், சிட்டிசன் கன்ஸ்யூமர் மற்றும் சிவிக் ஆக்ஷன் குரூப் (சி.ஏ.ஜி.) இணைந்து உயர் ரத்த அழுத்தத்தின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த பகுப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கான முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் உக்திகள் குறித்து விவாதித்தனர்.இதில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.