விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-20 10:07 GMT
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா, மாவட்ட தலைவர் முருகாயி, மாவட்ட பொருளாளர் தமிழரசி ஆகியோர் தலைமையில், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் வருவாய் கிராம உதவியாளருக்கு ஓய்வூதியமாக தமிழக அரசு ரூபாய் 6750 வழங்குவது போல், தங்களுக்கும் வழங்கிட வேண்டும்,

அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியத்தையும் வழங்கிட வேண்டும் , மேலும் தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News