ஆவுடையார் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடக்கம்!

ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.;

Update: 2024-07-02 06:17 GMT

ஆவுடையார் கோவிலில் உள்ள மிகப் பழமையான திருவாவடு துறை ஆதீனத்துக்கு சொந்தமான ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை திருவிழா மற்றும் ஆணி திருமஞ்சன திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 8ம் தேதி மாணிக்கவாசகர் இடப்ப வாகனத்தில் எழுந்தருகிறார். 10ஆம் தேதி தேரோட்டமும் 11ஆம் தேதி வெள்ளி ரத காட்சியும் நடக்கிறது.

Advertisement

12ஆம் தேதி காலை திருவாசகம் பிறந்த வரலாற்று கூறிய அதிகாலை உபதேச காட்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு அனுக்ஞை. விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பூஜை ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை திருவாவடு துறை 24 வது குருமகா சன்னித சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாணைப்பட்டி கோயில் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மணியம் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News