சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் நடைபெற்ற ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-01-10 07:33 GMT
ஆஞ்சனேயருக்கு அபிஷேகம்
தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி சன்னிதானம் உள்ளது . இங்கு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் மஞ்சள், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.பக்தர்களுக்கு லட்டு பஞ்சாமிர்தத்துடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன .
Tags:    

Similar News