அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம்
சேலம், திமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தி.மு.க.வை தோற்றுவித்து தமிழ் சமுதாய மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டவர் அண்ணா. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நமக்கு வகுத்து அரசியல் பயணத்தில் வெற்றி கண்ட அவரது 55-வது நினைவு நாள் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
அவரது நினைவை போற்றும் வகையில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படுகிறது. வள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலையை அடைந்து சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், கிளை நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.