சோழவந்தான் அருகே அன்னதானம்

சோழவந்தான் அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.;

Update: 2024-05-18 05:45 GMT

சோழவந்தான் அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி பால கிருஷ்ணாபுரத்தில், எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார் . தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் ,இரும்பாடி பால கிருஷ்ணாபுரத்தில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். மருத்துவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் கருப்பட்டி கருப்பையா வரவேற்புரை ஆற்றினார் . முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம் .வி. கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில், நகரச் செயலாளர்கள் ,ஒன்றியச் செயலாளர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், மதுரைமேற்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மகளிர் அணியினர், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சார்புஅணி நிர்வாகிகள் மகளிர் அணியினர்மற்றும் அதிமுகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞரணி மாவட்டஇணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News