திருவண்ணாமலை குபேரலிங்கம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்கம்

திருவண்ணாமலை குபேரலிங்கம் கோயிலில் நடந்த அன்னதான திட்ட துவக்க விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.;

Update: 2024-02-03 06:54 GMT

 திருவண்ணாமலை குபேரலிங்கம் கோயிலில் நடந்த அன்னதான திட்ட துவக்க விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.

திருவண்ணாமலை அருள்மிகு குபேரலிங்கம் திருக்கோயிலில் அன்னதான திட்ட தொடக்க விழா. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் உபதிருக்கோயிலான அருள்மிகு குபேரலிங்கம் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்ணதான திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன், மாநில தடகள சங்க துணை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2023-2024ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு   திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் உபதிருக்கோயிலான அருள்மிகு குபேரலிங்கம் திருக்கோயிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டசப்பேரவை துணை தலைவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை இயக்குநர் சுதர்ஷன், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல்அலுவலர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா. ஜீவானந்தம், உறுப்பினர்கள் டி.வி.எஸ். இராசாராம், கு.கோமதி குணசேகரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News