அன்னவாசல் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டி 26 பேர் காயம்
அன்னவாசலில்நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இலுப்பூர் அருகே அன்னவாசலில் விருத்தபுரீஸ்வரர் கோயில் மாசி மக தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர் மெய்நாதன் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியேசித்து தொடங்கி வைத்தார். முதலில் கோயிலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன தொடர்ந்து புதுக்கோட்டை திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரப்பட்ட 750 காளைகள் மருத்துவ குழுவினனார் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டன. 204 மாடு பிடி வீரர்கள் காளைகள் போட்டி போட்டு அடக்கினர்.
காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் காளைகள் அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கம் ,தங்கம், வெள்ளிகாசுகள் மற்றும் பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் ஊர்க்காவல் படை வீரர் விக்னேஷ் 27 மற்றும் கார்த்திக் 20, வீரமணி 36, கவின் 23, மனோகரன் 47 உள்ளிட்ட 26 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு இலுப்பூர் ஆர்டிஓ ஓ கருணாகரன், தாசில்தார் சூரிய பிரபு ஆகியோர் பார்வையிட்டனர்.