ஊத்தங்கரை அருகே தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
ஊத்தங்கரை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 15:06 GMT
ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெங்கடத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமை தாங்கிய விழாவில், ஸ்ரீ தனலகஷ்மி அறக்கட்டளை நிறுவனர் எழிலரசி நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தினார்.
குழந்தைகளின் தனி ஆர்வத்தை வெளிக்காட்டும் வகையில் தங்களது தனி திறன்களை நடனமாடியும் நாடகப் போட்டிகளில் பங்கேற்றம் தனித்திறன்களை வெளி காட்டினார்கள் விழாவில், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.